Recent Posts

Search This Blog

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டில் 25 கோடி ரூபா பெறுமதியான கொள்ளை சம்பவத்தில் இருவர் கைது.

Thursday, 22 December 2022


ம்பலப்பிட்டி-ஸ்கெல்டன் வீதியிலுள்ள கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டில் சுமார் 25 கோடி ரூபா, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்கள், தங்கம், வெள்ளி, முத்துக்கள் மற்றும் கைத்துப்பாக்கி என்பவற்றை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொரளை மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸார் இணைந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கொம்பனித்தெரு மற்றும் ஹோகந்தர பிரதேசத்தில் வசிக்கும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ஜயக்கொடிகே ருவன் பிரேம குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரிடமும் 380 கிராம் தங்க நகைகள், 10,000 அமெரிக்க டொலர்கள், 950,000 ஜப்பானிய யென், ரொலக்ஸ் கைக்கடிகாரங்கள், இரத்தினக் கற்கள் மற்றும் 174 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள், கைத்துப்பாக்கி மற்றும் பத்து கிராமுக்கு அதிகமான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோடீஸ்வர வர்த்தகரின் மூன்று மாடி வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள குளியலறையின் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த சந்தேகநபர்கள் அங்கிருந்த சொத்துக்களை திருடி தப்பிச் சென்றுள்ளார்.


திருடிய போது மனைவி மற்றும் இரண்டு பணிப்பெண்கள் கீழ்த்தளத்தில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட சொத்துகள் தொழிலதிபர், அவரது மனைவி மற்றும் அவரது மருமகளுக்கு சொந்தமானது என்று விசாரணை செய்துவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்


No comments:

Post a Comment