Recent Posts

Search This Blog

Weather Alert ⚠️ இன்று நாட்டின் பல பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, 7 November 2022


நாட்டின் அனேகமான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலநறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


கடல் பிராந்தியங்களில் 

****************************


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 


காங்கேசன்துறை தொடக்கம் மன்னார்,புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.


ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்தகாற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 



No comments:

Post a Comment