Recent Posts

Search This Blog

I எக்காரணம் கொண்டும் இலங்கைக்கு வரமாட்டோம் - கனடா செல்லும் வழியில் வியட்நாமில் சிக்கிய இலங்கை அகதிகள் திட்டவட்ட அறிவிப்பு.

Thursday, 10 November 2022
கனடாவுக்குச் செல்லும் நோக்கில் தென் சீனக் கடற்பரப்பில் மீட்கப்பட்ட படகில் இருந்த இலங்கை அகதிகள் தாய்நாட்டுக்கு மீளத் திரும்பு வதற்கு விரும்பவில்லையென திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.


வியட்நாம் நாட்டில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 அகதிகளில் பெரும்பாலானோர் தமது நிலைப்பாட்டை அந்நாட்டு அதிகாரிகளுக்கு நேற்று தெரியப்படுத்தியுள்ளனர்.

அதனடிப்படையில் கனடாவுக்குச் செல்வதே தமது நோக்கமென்றும் குறிப்பிட்டுள்ளனர்.


ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் பிரதி நிதிகளிடமும் இந்த விடயத்தை அவர்கள் வலியு றுத்தியுள்ளனர்.

இலங்கையிலிருந்து அகதிகளாகச் சென்றோரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இருப்பதால் நாட்டில் மிகக் கடுமையான விசார ணைகள் முன்னெடுக்கப்படும் என அஞ்சுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கடுமையான பொருளாதார நெருக்கடி காரண மாக இலங்கையில் உயிர்வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட் டுள்ளதாகவும் அகதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தாம் மீண்டும் நாடுகடத்தப்பட்டால் நீண்டகால விசார ணைகள், தடுப்புக்காவல் என பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும் என அஞ்சுவதாக அவர்கள் ஐ.நா. முகவர்களிடம் தெரிவித்துள்ளதாக அறியமுடிந்தது.

இதேவேளை, அகதிகளின் நிலைப்பாடு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கையில்,


இலங்கையிலிருந்து கனடா நோக்கிச் சென்ற அகதிகள் வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்டு அந்நாட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் நாட்டுக்கு மீள திரும்புவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். அவர்கள் விரும்பும் பட்சத்தில் பாதுகாப்பாக அழைத்து வர நாம் நடவடிக்கை எடுப்போம்.


அவர்களின் நலன், பாதுகாப்பு குறித்து இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என்றார்.

இந்த விடயம் குறித்து இலங்கையிலுள்ள வியட்நாம் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் ‘தமிழன்’ நாளிதழுக்கு கருத்து வெளியிட்டார்.

வியட்நாமிலுள்ள இலங்கைத் தூதரகம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுடன் பேச்சுகளை நடத்தியுள்ளது. அந்தக் கலந்துரையாடல்களின் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், வியட்நாமில் தஞ்சமடைந்துள்ள அகதிகள் அனைவரது உடல்நிலை ஆரோக்கியமாக உள்ள தாகவும் அவர்கள் தற்காலிக தங்குமிட வசதிகள் வழங்கப் பட்டுள்ளதாகவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லீ திது ஹெங் தெரிவித்துள்ளார்.

- Thamilan -


No comments:

Post a Comment