Recent Posts

Search This Blog

காத்தான்குடி - கொழும்பு ஹாட்வெயார் களஞ்சியசாலையில் தீப்பரவல்; களஞ்சியசாலை முற்றாக எரிந்து சேதம்

Monday, 14 November 2022


காத்தான்குடி கொழும்பு ஹாட்வெயார் களஞ்சியசாலையில் தீப்பரவல்;
களஞ்சியசாலை முற்றாக எரிந்து சேதம்

காத்தான்குடி கொழும்பு ஹாட்வெயாருக்குச் சொந்தமான, காத்தான்குடி-01, முதியோர் இல்ல குறுக்கு வீதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளது.

இன்று (15) நள்ளிரவு 1.30 மணியலவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீ பரவலின் காரணமாக களஞ்சியசாலை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன், மின்னொழுக்கே இதற்கு காரணம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இக் களஞ்சியசாலையில் 40 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவை அனைத்தும் எரிந்து தீக்கிரையாகியுள்ளதாகவும் அதன் உரிமையாளர் நஜீப் தெரிவித்தார்.

Photo & News
- நன்றி : Zajil -





No comments:

Post a Comment