களுவாஞ்சிகுடி.
அஸ்ஹர் இப்றாஹிம்
கல்வி அமைச்சின் ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டுக்கிளை அத்துடன் தேசிய
நீர்வழங்கல் வடிகால் வாரியம்
இணைந்து நடத்தும் இளம் ஆராய்ச்சி
யாளர் போட்டி நிகழ்ச்சியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் , தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி .
இரசாயனவியல் ஆசிரியர் திரு.செ.தேவகுமார்
அவர்களின் நெறிப்படுத்தலில்
போட்டியிட்ட செல்வன். ம.தசாப்தன்
செல்வன்.தி.சேம் செல்வி த.வேதுஜா
செல்வி சு.சுமித்ரா செல்வி கோ.
சஸ்மிகா உள்ளடங்கிய குழுவினர்
" கழிவு நீரில் உள்ள சாயங்களை
அகற்ற மாற்றியமைக்கப்பட்ட நெல்லி
விதையை பயன்படுத்துதல்" எனும்
ஆராய்ச்சி முன்மொழிவையும்
செல்வன்.ர.கேனுசாந் செல்வன் அ.
சஜித் செல்வி சி.தரணியா செல்வி
ச.திருத்திகா செல்வி வ.பத்மலோஜி
னி. உள்ளடங்கிய குழுவினரின்
"உள்நாட்டில் கிடைக்கும் மாற்றியமைக்கப்பட்ட களி மண்ணின்
பச்சை உறுஞ்சியைப் பயன்படுத்தி
நீரைச் சுத்திகரித்தல்" எனும்
ஆராய்ச்சி முன்மொழிவும் இறுதிச்
சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன
இலங்கையில் போட்டியிட்ட பாடசாலைகளில் இறுதிச் சுற்றுக்கு தெரிவு
செய்யப்பட்ட ஒரேயொரு தமிழ்மொழி
மூல பாடசாலை பட்டிருப்பு
மத்திய மகா வித்தியாலயம் , தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி இறுதிச்சுற்றுக்கு தெரிவான
மாணவர்களும் பொறுப்பாசிரியரும்
இன்று 01.11.2022 காலை ஒன்று
கூடலில் பாடசாலை முதல்வர்
திரு.எம்.சபேஸ்குமார் மற்றும்
பிரதி முதல்வர் திரு.ரீ ஜனேந்திரராஜா
அவர்களாலும் பாராட்டிக் கௌரவிக்கபட்டார்கள்.
இந்நிகழ்வில் பாடசாலை உதவி அதிபர்கள் , பகுதித் தலைவர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment