Recent Posts

Search This Blog

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு... தனுஷ்க குணதிலகாவுக்கு பிணை மறுக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Sunday, 6 November 2022


இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு பிணை மறுக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


தனுஷ்க குணதிலக்க மீது 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் பிணை கோரி சிட்னி நீதிமன்றத்தில் இன்று (7) கைவிலங்குடன் காணொளி மூலம் ஆஜரானார்.


தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே பேசிய குணதிலக, டவுனிங் சென்டர் கோர்ட்டில் திரையின் மூலம் காட்சிப் படுத்த பட்டார்


"அவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜை என்பதன் அடிப்படையில் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் வழங்கிய முகவரியில் அவர் இருப்பதாக அவர்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது" என்று தனுஷ்க குணதிலக்கவுக்கு நெருக்கமான வட்டாரம்
தெரிவித்தது.


மேலும் இவர் ஒரு புனர்வாழ்வு மையத்தில் வைக்கப்படுவார்.


No comments:

Post a Comment