ஓமானில் இலங்கைப் பெண்களை விபச்சாரத்திற்கு விற்பனை செய்யும் தகவல் வெளியானதையடுத்து, சுற்றுலா விசாவில் ஓமான் மற்றும் டுபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு இராச்சிய நாடுகளுக்கு செல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தடை விதித்துள்ளது.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“இந்த விடயத்தில் தவறு செய்தவர் எவராக இருந்தாலும் நாங்கள் தராதரம் பார்க்க மாட்டோம். தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். சுற்றுலா விசாவில் பயணம் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.” என்றார்



No comments:
Post a Comment