Recent Posts

Search This Blog

பாகிஸ்தானுடன் மோத அணிகள் பயப்படுகின்றன... இனி வரும் போட்டிகளில் பாகிஸ்தானை தோற்கடிக்க அணிகள் இல்லை.

Monday, 7 November 2022


T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை
 எட்டியுள்ளது.


இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.


கிடைத்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி வங்கதேசத்தை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி.


Group 2 இல் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணி, அரையிறுதியில் க்ரூப் 1ல் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.


வரும் 9ம் தேதி அடிலெய்டில் நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன.


இந்நிலையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளை பகிரங்கமாக எச்சரித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன்.


பாகிஸ்தான் அணி T20 உலக கோப்பைக்கு வரும்போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகிய இருவரையுமே அதிகமாக சார்ந்திருந்தது.


மிடில் ஆர்டர் பலவீனமாக இருந்தது.


அதுவே பெரிய பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் பாபர் அசாமும், ரிஸ்வானும் தான் ஒழுங்காக ஆடவில்லை. ஃபகர் ஜமானுக்கு மாற்று வீரராக அணியில் எடுக்கப்பட்ட முகமது ஹாரிஸ் கடைசி 2 போட்டியில் அதிரடியாக ஆடி மிரட்டினார். ஷான் மசூத், ஷதாப் கான், இஃப்டிகார் அகமது ஆகியோரும் சிறப்பாக ஆடிவருகின்றனர். 

பாகிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலிங் எப்போதுமே மிரட்டலானதுதான்.

 ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், முகமது வாசிம் ஆகிய நால்வரும் தங்களது வேகத்தில் எதிரணிகளை மிரட்டுகின்றனர்.


ஸ்பின் பவுலிங்கில் ஷதாப் கான், முகமது நவாஸுடன் தேவைப்படும்போது இஃப்டிகாரும் சிறப்பாக செயல்படுகிறார்.


பேட்டிங் தான் அந்த அணியின் பெரிய பிரச்னையாக இருந்துவந்த நிலையில், முகமது ஹாரிஸ், ஷதாப் கான், ஷான் மசூத் ஆகியோர் நம்பிக்கையளிப்பதால் பாகிஸ்தான் அணி உற்சாகமும் உத்வேகமும் அடைந்துள்ளது.


இந்நிலையில், பாகிஸ்தான் அணி குறித்து பேசியுள்ள அந்த அணியின் ஆலோசகரும் ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவானுமான மேத்யூ ஹைடன், பாகிஸ்தான் அணி உண்மையாகவே எதிரணிகளுக்கு பெரிய அபாயமாக திகழ்கிறது.


இப்போதைய சூழலில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள எந்த அணியும் விரும்பவில்லை.

பாகிஸ்தான் அணியை காலி செய்துவிட்டதாக நினைத்தார்கள். ஆனால் இப்போது பாகிஸ்தனை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment