Recent Posts

Search This Blog

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்தில் (கைதும் செய்யப்பட்டு விடுதலையான) ரிஷாட் பதியுதீனை வழக்கிலிருந்தும் விடுவித்தது நீதிமன்றம்.

Wednesday, 2 November 2022


உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ரிஷாட் பதியுதீன் எம்.பி. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment