Recent Posts

Search This Blog

மீட்டர் வட்டிக் கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட வர்த்தகர்.

Friday, 4 November 2022


யாழ். நகர வர்த்தகர் ஒருவர் மீற்றர் வட்டிக் கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

யாழ். நகர் பகுதியில் கடை ஒன்றினை நடாத்தி வந்த 37 வயதுடைய இளம் வர்த்தகரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த நபர் தனது வர்த்தக நோக்கத்திற்காக மீற்றர் வட்டிக்கு ஒரு தொகை பணத்தினை தனி நபர் ஒருவரிடம் வாங்கியுள்ளார்.

அந்த பணத்திற்கான வட்டி அதிகரித்து திருப்பி செலுத்த வேண்டிய பணத்தொகை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது.

இந்நிலையில் குறித்த வர்த்தகர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டள்ளமை குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment