
உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் , அனைத்து உலகக் கோப்பை மைதானங்களிலும் மது விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று கத்தார் அரச குடும்பம் ஃபிஃபாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் மது அருந்தும் வெளிநாட்டினர் அல்லது அவர்களது வீடுகளில் சிறப்பு அனுமதி பெற்றுள்ள முஸ்லீம் அல்லாத குடிமக்களுக்கு பொதுவாக மது விற்பனை கட்டுப்படுத்தப்படும் அதேவேளை உலகக் கோப்பை மைதானங்களில் பீர் விற்பனை செய்வதை நிறுத்துமாறு ஃபிஃபாவுக்கு கணிசமான அழுத்தம் கொடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.


No comments:
Post a Comment