Recent Posts

Search This Blog

ராஜிதவின் முடிவிற்கு அவருக்கு நெருக்கமானவர்கள் கடும் எதிர்ப்பு ..

Wednesday, 16 November 2022




ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன விரைவில் அரசுடன் இணைந்துகொள்ள உள்ளதாக அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


அவருக்கு அமைச்சரவையில் சுகாதார அமைச்சு வழங்கப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அவரது இந்த முடிவிற்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.


முக்கியமாக அவருக்கு மிக நெருக்கமானவராக இருக்கும் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின்  முன்னாள் தலைவர் ரூமி ஹாஷிம் அவரை அரசில் இணைய வேண்டாம் என  அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.


ராஜித சேனாரத்ன அரசில் இணையும் பட்சத்தில் அவருக்கு நெருக்கமானக் இருக்கும் ரூமி ஹாஷிம் உள்ளிட்ட பலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் தங்கிவிடுவார்கள் என கூறப்படுகிறது.



No comments:

Post a Comment