இந்தியாவின் அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேற்று நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது முதல் வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்படுகிறது. இன்று, அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அருணாச்சலப் பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளனர். இது ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது.
முன்னதாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேரில் இன்று ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) படி, நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆகும். நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2.29 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் ஆழம் தரையில் இருந்து 10 கிலோ மீட்டர் என்றும் கூறப்பட்டுள்ளது



No comments:
Post a Comment