சி.எல்.சிசில்-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தனது கிராமமான அம்பாறையிலிருந்து கொழும்புக்கு வருவதற்கு எரிபொருள் செலவு ஐம்பத்தையாயிரம் ரூபாவாகும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு இடங்களுக்குச் சென்றால் 75,000 ரூபா எரிபொருளுக்குச் செலவிடப்படுவதாகவும், அந்த வீடுகளின் தூரம் சில சமயங்களில் இருநூறு கிலோமீற்றரைத் தாண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பயணத்துக்கான எரிபொருள் செலவுக்கு தற்போதைய கொடுப்பனவு போதாது எனவும், இதுவரை தலா 104 ரூபாவில் 600 லீற்றர் எரிபொருளுக்கு பணம் வழங்கிய போதிலும் இன்று அந்தத் தொகைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது வீடு எரிந்து நாசமானதால், தங்குவதற்கு இடம் இல்லாமல் யாசகனாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்



No comments:
Post a Comment