Recent Posts

Search This Blog

படகுச் சவாரி சென்ற போது அனர்த்தம்.. 3 சிறுமிகள் மாயம் - 5 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

Saturday, 12 November 2022



சூரியவெவ, மஹாவெலிக்கட ஆரா வாவியில், இன்று (12) காலை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.


படகுச் சவாரி செய்ய சென்ற போது, படகு கவிழ்ந்ததில் அதில் 8 பேர் இருந்ததாகவும் எட்டு மாத கைக்குழந்தை உட்பட ஐவர் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.


10 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளே காணாமல் போயுள்ளனர் என்றும் அவர்களை தேடும் பணியை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர் என்றும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.



No comments:

Post a Comment