Recent Posts

Search This Blog

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 20 பேர் வரை உயிரிழப்பு.. பாரிய சேதம்.

Monday, 21 November 2022


இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தினால் 300இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தால் சியாஞ்சூர் என்ற பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த மரணங்கள் அனைத்தும் ஒரே ஒரு மருத்துவமனையில் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் 4 மருத்துவமனைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment