மினுவாங்கொடை இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை – பொல்வத்தையில் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப்படையினருக்கும், பாதாள உலக குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் குற்றவாளியான உரகஹ இந்திக்கவின் பிரதான அடியாட்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
இதன் போது காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் சிகிச்சைக்காக மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொத்தல பிரதேசத்தில் வசிக்கும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த நபர்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில் 4 வயது குழந்தை மற்றும் அதன் தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
T-56 ரக துப்பாக்கி, 12 bore வெடிமருந்து துப்பாக்கி மற்றும் ரம்போ ரக கத்தி ஆகியவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் தலைமையக முகாமின் விசேட அதிரடி சோதனை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்



No comments:
Post a Comment