Recent Posts

Search This Blog

1.8 மில்லியன் ரூபா பணம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவை விசாரிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.

Friday, 11 November 2022


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாசஸ்தளத்தில் இருந்து 1.8 மில்லியன் ரூபா மீட்கப் பட்டது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஜுலை 9 இல் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால்
கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் 18 மில்லியன் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டது.


ஜூலையில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, பல அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டனர் மற்றும் கிட்டத்தட்ட ரூ. 1.8 மில்லியன் பணம் கண்டெடுக்கப்பட்டு எண்ணப்பட்டு, போராட்டக்காரர்களால் கோட்டை காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும், இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.
▶️ Facebook இல் தொடர்ந்தும் எமது செய்திகளை பெற வாசகர்கள் எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் Page 


என்ற பக்கத்தை Like / Follow செய்து கொள்ளவும். நன்றி


No comments:

Post a Comment