Recent Posts

Search This Blog

பிற்பகல் / மாலை வேளையில் 100 mm வரையிலான பலத்த மழை எதிர்பார்ப்பு.

Monday, 14 November 2022


 நாட்டின் அனேகமான இடங்களில் பிற்பகல் இரண்டு  மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 mm வரையிலான  பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


வடக்கு  கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் கிழக்கு மற்றும் தென்  மாகாணங்களிலும்  காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.


மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய  சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


கடல் பிராந்தியங்களில் 

****************************


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின்  பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும். 


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து  காற்று வீசும்.


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 


ஆனால்  இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்தகாற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 



No comments:

Post a Comment