அத்துரிகிரிய, துனந்தஹேன
பகுதியில் நீராட சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (17) இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மழையுடனான வானிலை காரணமாக பாரிய கற்குழியொன்றில் நிரம்பியிருந்த மழை நீரில் நீராடிய போதே சிறுவர்கள் இருவரும் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சிறுவர்களின் உடல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



No comments:
Post a Comment