Recent Posts

Search This Blog

நமீபியாவை வீழ்த்தியது நெதர்லாந்து அணி - இலங்கைக்கு Net Run rate முறை அதி முக்கியமானதாக மாறியது.

Tuesday, 18 October 2022


2022 T20 உலகக் கிண்ண தகுதிகான் சுற்று போட்டியில் குரூப் A யில் இன்று நெதர்லாந்து அணி, நமீபியாவை வீழ்த்தியது.


121 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய நெதர்லாந்து அணி 19.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.


இன்று நெதர்லாந்து வெற்றி பெற்றதால், அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் இலங்கைக்கு நிகர ஓட்ட விகிதம் ( Net run rate ) தேவை படுகிறது .


இலங்கையின் NRR நமீபியாவுடனான கடுமையான தோல்விக்குப் பிறகு மிகவும் குறைந்து உள்ளது.


அதே வேளை எதிர்வரும் வியாழன் அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நமீபியாவை வீழ்த்தினால், இரண்டு வெற்றிகளுக்குப் பிறகும் இலங்கை NRR இல்லாமல் தகுதிபெற முடியும்.



No comments:

Post a Comment