Recent Posts

Search This Blog

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, வெலிபென்ன வெள்ளத்தில் மூழ்கியது.

Thursday, 13 October 2022


தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன நுழைவாயில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் சிறிய ரக வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

வெலிபென்ன நுழைவாயிலுக்கு அருகில் இரண்டு இடங்களில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு நெடுஞ்சாலை பராமரிப்பு பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு அல்லது காலி நோக்கி பயணிக்க விரும்பும் சாரதிகள் குருந்துகஹ​தெக்ம அல்லது தொடங்கொட நுழைவாயிலை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment