Recent Posts

Search This Blog

சஜித் ஹம்பாந்தோட்டையில் அமோக வெற்றி !

Saturday, 8 October 2022


ஹம்பாந்தோட்டை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இங்கு 483 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர், அவர்களில் 335 பேர் ஐக்கிய மக்கள் சக்தி முன்னிறுத்திய வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒன்பது வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளதுடன், பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட 9 வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

இதன்படி, வரலாற்றில் முதன்முறையாக ராஜபக்சர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு வேட்பாளரும் வெற்றிபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

நாடு தழுவிய கூட்டுறவுத் தேர்தல்களில் பெரும்பாலானவற்றில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பொதுஜன பெரமுனவை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் ஏற்பாட்டில் “ஒன்றிணைந்து நிற்போம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்” என்ற தொனிப்பொருளில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment