Recent Posts

Search This Blog

கைதியான தனது தந்தைக்கு வழங்க, மார்ப்பு கச்சைக்குள் மறைத்து ஐஸ் போதைப்பொருள் கொண்டுவந்த மகள் கைது.

Friday, 14 October 2022


தன்னுடைய மார்ப்பு கச்சைக்குள் தீப்பெட்டியை மறைத்து வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த தீப்பெட்டிக்குள் சிறிய பொலித்தீக்களில் சுற்றப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 29 வயதான அந்தப் பெண், மொட்டுவ மொட்டுமுல்லையைச் சேர்ந்தவர் என்றும் அவரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறைச்சாலையில் இருந்து பாணந்துறை நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட கைதியான தனது தந்தைக்கு, வழங்க, தீப்பெட்டிக்குள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து அதனை மார்ப்பு கச்சைக்குள் மறைத்துவைத்து எடுத்து​வந்துள்ளார்


No comments:

Post a Comment