Recent Posts

Search This Blog

திலினியை மீண்டும் அழைத்து சென்றது சீ.ஐ.டி

Saturday, 15 October 2022


 பாரிய நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான திலினி பிரியமாலி சிறைச்சாலையில் இருந்து இன்று (15) விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள (சீ.ஐ.டி) அதிகாரிகளால் இன்று காலை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியின் பிரகாரம் சந்தேகநபர் விசாரணைக்காக குறித்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment