மொரகல்ல பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதியை காரில் கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அளுத்கம மற்றும் மொரகல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் முறிவினால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக நேற்றிரவு (12) குறித்த கடத்தல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட நபர் தன்னஹேன யக்வத்த பகுதியில் உள்ள வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் கண்டுபிடிக்கப்பட்டு சினவத்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



No comments:
Post a Comment