Recent Posts

Search This Blog

பாண் மோசடி முறைப்பாடுகளை தெரிவிக்க விஷேட இலக்கம் - ( நேற்று 70 கடைகளுக்கு எதிராக நடவடிக்கை)

Saturday, 22 October 2022


குறைந்த நிறை கொண்ட பாண் விற்பனை செய்யும் கடைகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு அளவீட்டு அலகுகள் மற்றும் தரநிலை சேவைகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

011 2 18 22 50 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அதன் பணிப்பாளர் நாயகம் சுஜீவ அக்குரந்திலக்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, குறைந்த நிறையை கொண்ட பாண் விற்பனை செய்த சுமார் 70 விற்பனை நிலையங்களை நேற்று (22)
நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு குறைந்த நிறைக் கொண்ட பாண்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் மீது நுகர்வோர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment