Recent Posts

Search This Blog

VIDEO இணைப்பு : புத்தளத்தில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தன .

Thursday, 1 September 2022


புத்தளம் வைத்தியசாலையில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.

24 வயதான இளம் தாய் ஒருவரே இவ்வாறு நான்கு குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலையின் பணிப்பாளர் சுமித் அன்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பிறந்த குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தையொன்றும், மூன்று பெண் குழந்தைகளும் அடங்குவதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டார்.

தற்போது குறித்த நான்கு சிசுக்களும் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் சிறுவர்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணரின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment