Recent Posts

Search This Blog

I கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சூரிய சக்தி மூலம் இயங்கும் படகுச்சேவை ஆரம்பம்.

Saturday, 24 September 2022

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக சுற்றுச்சூழலுக்கு இணக்கமான, பயணிகள் படகு சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

பத்தரமுல்லை – ஹீனெடிகும்புர முதல் வெள்ளவத்தை வரை இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த படகு சேவையானது சூரிய சக்தி மூலம் இயக்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.

நாட்டின் உள் கால்வாய்கள் ஊடாக மேலும் பல படகு சேவைகளை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

சூரிய சக்தி மூலம் செயல்படுவதால் இந்தப் படகுச் சேவைகளுக்கு எரிபொருள் செலவு ஏற்படாது என்றும், இதனால் ஒலி மாசு ஏற்படாது எனவும் கூறப்படுகிறது.

இந்த படகு சேவை தினசரி அலுவலக நேரங்களில் இயங்கும். படகொன்றில் எட்டு பேர் வரை பயணிக்க முடியுமெனவும் கூறப்படுகிறது


No comments:

Post a Comment