யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் கத்தியினால் வெட்டி காயப்படுத்திவிட்டு, அவரிடமிருந்த நகையையும் பணத்தினையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்.
சங்கானை பகுதியில் உள்ள வங்கி ஒன்றுக்கு சென்று விட்டு, தனது வீடு நோக்கி குறித்த நபர் நடந்து சென்று கொண்டிருந்த வேளை, அவரை பின் தொடர்ந்து துவிச்சக்கர வண்டியில் வந்தவர், ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் இடைமறித்து கத்தியால் வெட்டி காயப்படுத்திய பின்னர் அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலி மற்றும் அவரிடம் இருந்த 15,000 ரூபா பணம் என்பவற்றை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து துவிச்சக்கர வண்டியிலையே தப்பி சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்னர்



No comments:
Post a Comment