Recent Posts

Search This Blog

வட்டிக்குக் கடன் கொடுக்கும் (31 வயது) நபர் பணத் தகராறு காரணமாக சுட்டுக் கொலை

Sunday, 4 September 2022


காலி மாவட்டத்தின் பிடிகல பொலிஸ் பிரிவில் சனிக்கிழமை (3) இரவு 31 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கராப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் வட்டிக்குக் கடன் கொடுக்கும் நபர் எனவும் பணத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


No comments:

Post a Comment