Recent Posts

Search This Blog

பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவிலேயே மிக உயரமான லோட்டஸ் டவரின் முதல் நாள் வருமானம் சுமார் 15 இலட்சம் ரூபா.

Friday, 16 September 2022


பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடத்தை பார்வையிடுவதற்கான டிக்கட் விற்பனை மூலம் நேற்று (16) ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, முதல் நாள் வருமானம் சுமார் 15 இலட்சம் ரூபா என தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று 2,612 பேர் தாமரை கோபுரத்தை பார்வையிட வந்துள்ளதாகவும் அவர்களில் 21 வெளிநாட்டவர்கள் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment