Recent Posts

Search This Blog

இமய மலையே வியக்கும் இமாலய சாதனை! 106 Km நடந்து ஸ்ரீ பாத மலையேறிய பேருவளை இளைஞன்.

Tuesday, 20 September 2022


இமய மலையே வியக்கும் இமாலய சாதனை!

106 Km நடந்து ஸ்ரீ பாத மலையேறிய பேருவளை இளைஞன்...

சாதனைகள் பலவிதம்... இதுவோ புதுவிதம்!

இரண்டு மாடி ஏறி விட்டு இருபது நிமிடம் மூச்சு வாங்கும் காலமிது. அப்படி இருக்கையில் ஒருவன் இரண்டு நாட்களுக்கு மேல் நடந்து, பின் கரடு முரடான காட்டுப் பாதையைக் கடந்து 2243m உயரமான ஸ்ரீ பாத மலையுச்சியை அடைவது என்பதெல்லாம் வேற லெவல்..

தரமான சிறப்பான சம்பவம்!!

Shahmee Saheedh . துடிப்பான இளைஞன். ஒரு YouTuber. சமூகநேயமுடையவன்.

இலங்கையின் பல இடங்களுக்குச் சென்று இயற்கையைத் தானும் ரசித்து,

Show me the view எனும் தனது YouTube channel இல் அந்த வீடியோக்களை இட்டு பிறரையும் ரசிக்க வைக்கும் சாமர்த்தியம் மிக்கவன்!

இருந்தும் இவனுக்கு உரிய அங்கீகாரம் சரியாகக் கிடைக்கவில்லை!

ஆனால் எதையும் இவன் பொருட்படுத்தவில்லை!

"சாதனை புரி'டா ஷஹ்மீ" என்று இவனுக்குள் இருந்து ஏதோ ஒரு குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருந்திருக்க வேண்டும்..

அதனால் தான் மாபெரும் சம்பவத்தில் இறங்கி இருக்கிறான் இந்த 23 வயது இளைஞன்!

எந்தவொரு சாதனைக்குப் பின்னாலும்,
மிகப் பெரும் அர்ப்பணிப்பு வேண்டும்..
உடலை வருத்தும் தியாகங்கள் வேண்டும்..

இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நடக்கத் தயாரான
இவனது துணிச்சல் உண்மையிலேயே பாராட்டத்தக்கது!

18 ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு தனது நடைப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறான், கையில் இருந்த வெறும் 900 ரூபாவோடு... கூடவே மனதில் பெரும் தைரியத்தோடு!!!

அந்த 900 ரூபாய் எதற்கு??? வயிற்றுக்குத் தான்!
பசித்தால் சாப்பிடலாம்....

சாப்பாடா? சாதனையா??

"சாதனையின் முன் சாப்பாடெல்லாம் ஒரு சாமனா" என்று பேருவளையில்  இருந்து நடக்க ஆரம்பித்தான் இவன் ...

இரண்டு நாட்களாக நடந்து ஸ்ரீபாத மலையடிவாரத்தை அடைந்து...

மூன்றாம் நாள் இன்று (செப்டம்பர் 20) காலை 7 மணிக்கு கரடுமுரடான காட்டுப்பதையில் (படிகளில் அல்ல!) மலையேற ஆரம்பித்து, 
நண்பகல் 12.30 மணிக்கு மலையுச்சியில் காலடி எடுத்து வைத்து சாதனை புரிந்திருக்கிறான்!!

பேருவளையில் இருந்து ஸ்ரீபாத மலையுச்சி வரை கிட்டத்தட்ட 106 km தூரம் நடந்திருக்கிறான்!!

'பேருவளையில் இருந்து ஸ்ரீபாதவிற்கு ஒரு இளைஞன் நடந்து வருகிறான்' எனும் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவ...
சிங்கள அன்பர்களுக்கும் அச் செய்தி சென்றடைந்தது!!

"யார்ரா இவன்... இவனைப் பார்த்தே ஆக வேண்டும்!" என்று இவரைச் சந்திக்க பல சிங்கள அன்பர்கள் 
ஸ்ரீபாத மலையை அண்மித்த இடங்களில் காத்திருந்து இவனைச் சந்தித்தனர்...

இவரது சாதனையைப் பாராட்டி ஊக்குவித்தனர்!!

எனக்குத் தெரிந்து இலங்கையில் இப்படி நடந்து பிரசித்தி பெற்ற ஸ்ரீபாத மலையை உச்சியை, மூன்று நாட்களாக நடந்து ஏறியதில்லை!!!

சாதனை புரியும் இப்படியான இளைஞர்களைப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்!!!

அடுத்து இலங்கை பூராவும் நடந்து சாதிக்கும் நோக்கில் இருக்கிறார். Sponsors கிடைத்தால் அதையும் சாதிப்பான்!!!

இவரது சாதனையை உலகறியச் செய்வோம்!
மேலும் பல சாதனைகளைப் புரிய இவரை ஊக்குவிப்போம்!

இவ்வாறான சாதனைகளின் பால் எமது இளைஞர்களைத் தூண்டி விட்டால், 
இளைஞர்கள் தவறான பழக்க வழக்கங்களில் இருந்து தவிர்ந்து தேக ஆரோக்கியத்துடன் இருக்க முனைவார்கள் ....

விளையாட்டும் சாதனைகளுமே இளைஞர்களின் உள ஆரோக்கியத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன!

Ifham Aslam
20.09.2022


No comments:

Post a Comment