Recent Posts

Search This Blog

ஒக்டோபருக்குள் போதுமான நிலக்கரி கையிருப்பு கிடைக்காவிட்டால், 10 மணி நேர மின்வெட்டு !!

Saturday, 10 September 2022


நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால் நாளொன்றுக்கு சுமார் 10 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்படுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர எச்சரித்துள்ளார்.


2022 ஒக்டோபருக்குள் CEB க்கு போதுமான நிலக்கரி கையிருப்பு கிடைக்காவிட்டால், மின்சார உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


தற்போது நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறப்படுவதாகவும், மழைக்காலம் முடிவடையும் போது இலங்கையில் நீர் மின் உற்பத்தியில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், நுரைச்சோலை மின்நிலையத்தில் பழுதடைந்த ஜெனரேட்டரை  மீள இயக்கி நவம்பர் 2022க்குள் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




No comments:

Post a Comment