Recent Posts

Search This Blog

STF இனால் ஐஸ் போதைப்பொருளுடன் குடும்பஸ்தர் கைது

Tuesday, 23 August 2022


பாறுக் ஷிஹான்

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை  கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து செவ்வாய்க்கிழமை(23) இரவு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்பலா வீதி அலியார் சந்தியில் வைத்து   சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் 37 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ்  போதைப்பொருள் 5 கிராம் 10 மில்லிகிராம்  விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையின் போது   விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய  மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்   டி.சி வேவிடவிதான  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்   எஸ்.எம்.பி.பி.எம்   டயஸ்  தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்களான  எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க  உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட்களான   பண்டார (13443)  வீரகோன் (33354) பொலிஸ் கன்ஸ்டபிள்களான நிமேஸ்(90699)பியுமக (94143) சாரதி ஜெயரட்ன (19786)அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
   
 பின்னர்  கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன்    பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment