ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் அமையும் எமது அரசாங்கத்தில் கண்டிப்பாக சட்ட நடவடிக்கை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அப்படியாயின் மொட்டுக் கட்சியினர் விருப்பத்துக்கு ஏற்றவகையிலா ஜனாதிபதி செயற்படுகிறார் எனவும் கேள்வி எழுப்பினார்.
போராட்டங்கள் அரசாங்கத்துக்கு எதிரான சதி என்றால், போராட்டத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலகியமை, போராட்டத்தின் ஊடாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப் பட்டமை என்பனவும் சட்டவிரோதமானது எனவும் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வாக்குகளால் ஜனாதிபதியாகப் போவதில்லை. அதேபோல் ஜனாதிபதியாக இன்னும் இரு வருடங்களுக்கு மாத்திரமே ரணில் இருக்கப்போகிறார் என்பதை அரச அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சட்டவிரோத உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



No comments:
Post a Comment