எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். மொட்டுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த என்னை மிக கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார்.
அவர் ஜனாதிபதியாக இருந்திருந்தால், அவரது வீட்டுக்கு முன்பாக ஹிருணிக்கா போராட்டம் செய்தால், ஹிருணிக்காவின் ஆடைகளை கலைந்து அவரை நிர்வாணப்படுத்தி, தாக்கி அனுப்பியிருப்பேன் என சனத் நிஷாந்த கூறியிருக்கிறார். பெண்களை இதுபோல மொட்டுக் கட்சியினர் அவமதிப்பது இது முதற்தடவையல்ல. இதற்கு முன்னரும் எஸ். பி.திஸாநாயக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை இவ்வாறு திட்டியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம். பிகள் எவராது பொது வெளியில் இதுபோல பேசியிருக்கிறார்களா?
மொட்டுக்கட்சிக்கு மட்டுமே இவ்வாறான ஆசை உள்ளது என்றார்.
பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் அனுப்புவதில் மொட்டுக் கட்சியினருக்கு அதிக ஆசை இருக்கிறது. .
கோட்டாவின் வீட்டுக்கு முன்பாக சென்று போராடினேன் என்பதாலேயே என்னை இவ்வாறு சனத் நிஷாந்த திட்டியிருக்கிறார். அதேபோல் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்.பியும், எனது வீட்டுக்கு முன்பாக ஹிருணிக்கா போராடினால் அவர் மீது அமிலத் தாக்குதல் மேற்கொள்ளவேன் என கூறியிருக்கிறார். இதற்கான ஆதாரம் என்னிடத்தில் உள்ளது என்றார்.



No comments:
Post a Comment