முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்ல நேரிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் silk route ஊடாக புறப்படும் முனையத்தின் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகள் கடமையில் இருந்து விலகி எதிப்பை காட்டினர்.
அதனையடுத்தே பசில் ராஜபக்ச திரும்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சக பயணிகளின் எதிர்ப்பு காரணமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சோதனை செய்ய அதிகாரிகள் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



No comments:
Post a Comment