சென்னை விமான நிலையத்தில் 9.43 மில்லியன் இந்திய ரூபா பெறுமதியான 1,746 இரத்தினக் கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டதாக இந்திய சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அறிவித்தலின் அடிப்படையில், சமீபத்தில் கொழும்பில் இருந்து சென்னை வந்த பயணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர் என்று சுங்க ஆணையர் கே ஆர் உதய் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட பரிசோதனையில் பயணி ஒருவர் விலைமதிப்பற்ற கற்கள் அடங்கிய பைகளை விழுங்கியிருப்பது தெரியவந்தது.
சுங்கச் சட்டம், 1962 இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அவரிடம் இருந்து 1,746 வகையான ரத்தினக் கற்கள் அடங்கிய 56 பைகள் அதிகாரிகளினா மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment