Recent Posts

Search This Blog

காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் ரணிலுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கிபார்க்க வேண்டும் i

Friday, 22 July 2022


-ஹஸ்பர்-
காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள்
ரணிலுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கிபார்க்க வேண்டும் எனவும்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தன்னுடைய நிலைப்பாட்டிலே உறுதியாக இருக்க வேண்டும் என்பதிலே நான் கவனமாக இருக்கின்றேன் எதிர் கால தேர்தலிலே மக்களுடைய நம்பிக்கையை பெற்ற தலைவராக இருக்கின்ற ரிசாத் பதியுதீன் அவர்களும் கட்சியும் எந்த தேர்தலிலே போட்டியிட்டாலும் தனித்து நின்று எதிர்காலத்தில் அமையப்போகின்ற பாராளுமன்றத்தில் அரசோடு இணைந்து கொண்டு செல்ல வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூம் தெரிவித்தார்.


கிண்ணியாவில் அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்

கோத்தபாயவின் பதவி விலகலின் பின் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகிய பின் அவர் மறு நாள் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் 57 நாடுகளின் தூதுவர்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி உதவிகளை நீண்ட கால அடிப்படையில் பெறுவது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளார் இவ்வாறாக சிறந்ததொரு தலைமைத்துவமாக சர்வதேசமும் இவரை ஏற்றுள்ளது .இது போன்று பாராளுமன்ற ஜனாதிபதி தெரிவின் பின் அவர் சஜீத்,மஹிந்த மைத்திரி போன்றவர்களிடமும் இணைந்து செயற்படுமாறும் கோரிக்கை விடுத்திருப்பது நாட்டை கட்டியுழுப்ப சிறந்த நிலையாக உள்ளது 113 ஆசனங்களை பெற வேண்டிய ரணில் 134 ஆசனங்களை தனிமனிதனாக நின்று இடைக்கால ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். 

சிறுபான்மை சமூகத்தை அசிங்கப்படுத்படுத்த நினைத்தபோது பெரும்பான்மை சமூகம் சிறுபான்மையினரை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய நிலை தற்போது நாட்டில்  ஏற்பட்டுள்ளது அதே போன்று இனவாதத்தை  கைவிட்டு பெசில், கோத்தா, மஹிந்த போன்றவர்களும் ஐக்கிய இலங்கையை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் . ஜேவிபியினர் ஆறு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள் ஐந்து இலட்சம் வாக்குகளை கூட பெற முடியாத நிலையில் உள்ளவர்கள் போராட்டக்காரர்களை தூண்டிவிடாமல் இந்த விடயத்தில் நிதானப் போக்குடன் செயற்பட வேண்டும். காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ரணிலுக்கு ஒரு சந்தர்ப்பத்தை குறைந்த பட்சம் ஆறு மாத காலமாவது வழங்கி பார்க்க வேண்டும் மக்களை முடிச்சுப்போட்டு செல்லும் நிலையில் இருந்தால் மக்களும் பாராளுமன்றமும் பதவி இழக்கச் செய்ய வேண்டும் .தற்போதைய நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜீத் மற்றும் முன்னால் ஜனாதிபதிகளான மஹிந்த , மைத்திரிபால போன்றவர்களும் நாட்டை கட்டியெழுப்ப ஒத்துழைப்புக்களை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க வேண்டும் .


அசேதனப் பசளை  தற்போது 10 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படுகிறது இது தொடர்ந்தும் இந்த நிலையில் விவசாயிகளுக்காக வழங்க நடவடிக்கைகளை எடுக்கவும் எனவும் மேலும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment