கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கிய சரக்கு விமானம் ஒன்று இன்று அதிகாலை சேதமாகி உள்ளது .
இந்த விமானம் ஏ330-300 எயார்பஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து இலங்கைக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு விமானம், 54 மெட்ரிக் டன் ஆடைப் பொருட்களுடன் இஸ்தான்புல்லுக்குத் திரும்புவதற்குத் தயாராக இருந்தபோது, துரதிஷ்டவசமான விபத்தை எதிர்கொண்டது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடத்துநர்களால் ஏற்றிச் செல்வதற்காக விமானத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பல கொள்கலன்கள் விமான நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த காற்று வீசியதால் விமானத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
கன்டெய்னர்கள் விமானத்தின் இரண்டாம் இன்ஜினில் மோதியதால் சேதம் ஏற்பட்டது.




No comments:
Post a Comment