Recent Posts

Search This Blog

எரிபொருள் நிரப்பு நிலையத்தினுள் விழுந்து இளம் முகாமையாளர் உயிரிழப்பு. I

Sunday, 3 July 2022


படிக்கட்டில் தவறி விழுந்த நிலையில்
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

படிக்கட்டில் தடுக்கி விழுந்து சுயநினைவிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்.கரவெட்டியை சேர்ந்த அனுரா அனுஷாந் (வயது34) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முகாமையாளராக கடமையாற்றி இருந்தார்.

கடந்த 30ஆம் திகதி எரிபொருள் நிரப்பு நிலையத்திலுள்ள படிக்கட்டில் ஏறியபோது தவறி விழுந்து சுயநினைவை இழந்தார். இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்று (02) காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது


No comments:

Post a Comment