ICTA மற்றும் பல இலங்கை தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவுடன் எரிசக்தி அமைச்சு , நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகத்தை நிர்வகிப்பதற்கும் வரிசைகளை எளிதாக்குவதற்கும் தேசிய எரிபொருள் பாஸ் அமைப்பை அறிமுகப்படுத்தியது.
அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த முறையை சனிக்கிழமை (16) நேரலை செய்தியாளர் சந்திப்பில் மக்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன் மேலதிக விவரங்களையும் தெரிவித்தார்.
தேசிய எரிபொருள் பாஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கிய புள்ளிகள் இவை :
இணையதளம்: https://fuelpass.gov.lk/
* அனைத்து வகையான தனியார் வாகனங்களுக்கும் வாராந்திர ஒதுக்கீடு உத்தரவாதம்
* நாடு முழுவதும் உள்ள அனைத்து CPC மற்றும் IOC எரிபொருள் நிலையங்களுக்கும் பொருந்தும்
*பொது போக்குவரத்திற்கு எரிபொருளின் வரம்பு இல்லை (பஸ்கள் / ரயில்கள்)
* அடுத்த சில நாட்களுக்கு பதிவு செய்யலாம் . NIC அல்லது பாஸ்போர்ட் எண். வாகன எண் மற்றும் செஸ்சி எண் கட்டாயம்
* எரிபொருள் ஒதுக்கீடு தயாரானதும் பயனர்களுக்குத் தெரிவிக்கப்படும்
* ஒரு அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட்/ இற்கு ஒரு வாகனம் மட்டும்
* எரிபொருள் ஒதுக்கீடு கிடைத்ததும், எரிபொருள் நிலையத்தில் QR குறியீட்டை காட்ட வேண்டும்.
* பயன்படுத்தப்பட்ட மற்றும் கிடைக்க உள்ள எரிபொருள் ஒதுக்கீடு மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை QR system காண்பிக்கும்
* ஒருவருக்கு ஒரு வார எரிபொருள் ஒதுக்கீட்டை மட்டுமே பாவிக்க முடியும்.
* வாகன எண்ணின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் நிரப்ப நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன
* வாகன இறுதி இலக்கம் படி...
0, 1, 2 - திங்கள் மற்றும் வியாழன்
3, 4, 5 - செவ்வாய் மற்றும் வெள்ளி
6, 7, 8, 9 - புதன், சனி & ஞாயிறு
எரிபொருள் பாஸ் சிஸ்டம் செயல்பட தொடங்கிய பின்னரே இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தைத் தொடங்கும்.
* தற்போது CPC எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்க வேண்டாம்
எரிபொருள் பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்படும் வரை IOC யில் தற்போதைய முறையே தொடரும்



No comments:
Post a Comment