Recent Posts

Search This Blog

சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் கோட்டாபய ராஜபக்ஷ செல்லவில்லை... பிரைவேட் ஜெட்டில் பயணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து காத்திருக்கிறார்.

Wednesday, 13 July 2022


கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் செல்லவில்லை,

மாறாக இப்போது தனியார் விமானத்தில் பயணிக்கக் காத்திருக்கிறார் என்று டெய்லி மிரர் பிரத்தியேகமாக செய்தி வெளியிட்டு உள்ளது .

ராஜபக்சேவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் அவர்களது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் SQ437 விமானத்தில் மாலேயில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று இரவு சிங்கப்பூர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் பாதுகாப்புக் காரணங்களால் விமானத்தில் ஏறவில்லை என்றும் மாலத்தீவு வட்டாரங்கள் தெரிவித்தன.


மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்காக இலங்கை ஜனாதிபதிக்கு தனி விமானம் ஒன்றை பெற்றுக் கொடுப்பது குறித்து தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

(ஜமிலா ஹுசைன்)


No comments:

Post a Comment