
பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய எம்.எம்.யமுனா பத்மினி (வயது 42) என்பவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் அவரது கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கோடரியும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை, பி.ஓ.பி.316, தல்பொத்த பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், கடந்த 4 ஆம் திகதி காலை தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது கூரிய ஆயுதத்தால் கொல்லப்பட்டுள்ளதாக புலஸ்திபுர பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த பெண்ணும் அவரது கணவரும் தமது இரு குழந்தைகளுடன் வீட்டின் மாடி அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது, யாரோ ஒருவர் தமது அறைக்குள் புகுந்து ஓடிவிட்டதாக அவரது கணவர் முதலில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்த தாக்குதலால் பலத்த காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர், சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் போது சந்தேக நபர் கொலை தொடர்பான பல தகவல்களை வெளிப்படுத்தியதாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்தனர்.
குடிபோதைக்கு அடிமையான கணவன் கடன் பிரச்சினைகளில் சிக்கியிருந்த இது தொடர்பில் ஏற்பட்ட வாய்தர்கம் கொலையில் முடிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.


No comments:
Post a Comment