Recent Posts

Search This Blog

கண்ணீர் புகை ஒவ்வாமை காரணமாக நேற்று ஒருவர் உயிரழப்பு ..

Wednesday, 13 July 2022

நேற்று (13) பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கையகப்படுத்த முற்பட்ட போது கண்ணீர் புகை பிரயோகத்திற்கு மத்தியில் போராட்டக்காரர்களில் ஈடுபட்டிருந்த ஒருவர் ஒவ்வாமை காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


மஹவ, தலதாகம பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான டி.எம்.ஜாலிய திஸாநாயக்க என்ற 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.


அவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்பதோடு, கண்ணீர்ப்புகை காரணமாக ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவரின் தந்தை மஹவ பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் என்பதுடன் நேற்று (13) காலை நண்பர்கள் குழுவுடன் போராட்ட மைதானத்திற்கு வந்து பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.-Thamilan-



No comments:

Post a Comment