Recent Posts

Search This Blog

ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் தொடர்ந்தும் தங்கி இருக்கும் போராட்டக்காரர்கள்.

Sunday, 10 July 2022


போராட்டத்துக்காக நேற்றைய தினம் கொழும்புக்கு வந்த மக்கள் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலேயே தொடர்ந்தும் உள்ளனர்.

நேற்று முற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பொலிஸாரின் தடைகளை மீறி ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பவற்றை முற்றுகையிட்டனர்.

அத்துடன் அலரிமாளிகைக்குள்ளும் சென்றிருந்தனர். நேற்றைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் களனி பல்கலைக்கழகத்திலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தது. அவர்கள் கொழும்பு கோட்டை பகுதியில் இரவு முழுவதும் தங்கினர்.

இந்தநிலையில் நேற்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் இருந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்புக்கு சென்றிருந்தனர்.

நேற்றைய போராட்டத்தில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் இரண்டு பொலிஸாரும் அடங்குகின்றனர்.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் இருவர் துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ள இருவரில் ஒருவரின் நிலை கவலைகிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment