நாளை மறுதினம் இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பில் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.
போராட்டத்தை வெற்றிக் கொள்ளும் இணக்கப்பாடு என்ற பெயரில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஒன்றிணைந்த பொதுமாநாட்டின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன, அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இணைத்தலைவர் பழனி திகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.



No comments:
Post a Comment