Recent Posts

Search This Blog

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் திருத்தப்பணி ; திங்கள் முதல் மின் வெட்டு அதிகரிக்கும் !!

Thursday, 16 June 2022



நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் திருத்தப்பணி ; திங்கள்  முதல் மின் வெட்டு அதிகரிக்கும் 


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தப்பணிகள் காரணமாக  திங்கள் முதல் மின் வெட்டு அதிகரிக்கும் என மின்சார சபை பொறியியளார் சங்கம் தெரிவித்துள்ளது.


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியில் மேற்கொள்ளப்பட இருந்த  திருத்தப்பணிகள்  கொவிட் காரணமாக மேற்கொள்ளப்படவில்லை என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.


வெளிநாட்டு நிறுவனம் ஒன்று குறித்த திருத்தப்பணிகளை கொவிட் நிலமை காரணமாக நாட்டிற்கு வந்து மேற்கொள்ள முடியாத காரணத்தினால் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது குறித்த பணிகள் இரண்டு மாதங்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த திருத்தப்பணி காரணமாக தேசிய கட்டமைப்பிற்கு 300 மெகாவொட் மின்சாரம் கிடைக்காது என மின்சார சபை பொறியியளார் சங்கம் தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment