
இந்திய கடன் சலுகையில் கிடைக்கும் கடைசி டீசல் கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளது.
குறித்த கப்பலில் சுமார் 38000 மெற்றிக் டொன் டீசல் கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது.இலங்கையின் டீசல் கேள்விக்கு அமைய சுமார் 8 நாள் பாவனைக்கு குறித்த டீசல் போதுமானதாகும்.
தற்போது டீசல் 12000 மெட்ரிக் டொன்களும் பெற்றோல் 6000 மெற்றிக் டொன்களும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கைவசம் உள்ளது. இந்த கையிருப்பு ஒரு நாள் பாவனைக்கு போதுமானது என்றாலும் குறித்த கையிருப்பினை சில நாட்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
தற்போது நாட்டில் உள்ள பெற்றோல் ஷெட்களில் 80 வீதமானவை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments:
Post a Comment